- · 5 friends
-
I
வடிவேலு என்னுடைய தெய்வம் - வெங்கல் ராவ்
முதலில் ஹீரோவாக ஆசைப்பட்டு பிறகு வில்லனாக மாறி தற்போது காமெடியில் கலக்கி வருபவர் வெங்கல் ராவ். தெலுங்கு மாவட்டத்தில் பிறந்தவர். கோயில் திருவிழாவில் கம்பு சுத்துற வேலையை பார்த்துள்ளார். அப்போது எத்தனை நாள் இப்படியே இருப்பாய் என அவரது தாயார் கூறியதைக் கேட்டு சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக செயல்பட முடிவு செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் கம்பு சுத்த கற்றுகொடுத்த மாஸ்டரும் சென்னையை வந்தடைந்தால் வெங்கல்ராவ்வும் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது இவருக்கு தமிழ் சரிவர பேச தெரியாது அதனாலேயே ஒன்பது வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சினிமாவையே சுற்றி வந்துள்ளார்.
25 வருடங்கள் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய இவருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் இடுப்பு போன்ற இடங்கள் பாதித்துள்ளன. அப்போது ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு படத்திற்காக ஸ்டண்ட் கலைஞராக நடிக்கக் கூப்பிட்டு உள்ளனர். அப்போது இவர் ஐயா என் உடம்பு எல்லாம் போயிருச்சு இனிமேல் என்னால் ஸ்டண்ட் கலைஞராக நடிக்க முடியாது வேற ஏதாவது கதாபாத்திரமாக இருந்தால் கொடுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.
வடிவேலு அவரது படங்களில் இவர் நடிப்பதற்கு ஒரு இடம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். அதன் மூலம் தான் இவர் காமெடியனாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இதனை அவரே பலமுறை பேட்டிகளில் கூறியது மட்டுமில்லாமல் வடிவேலு தான் எனக்கு கடவுள், தெய்வம் சோறு போட்ட சாமி எனவும் கூறியுள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பிரபலமான காமெடி வசனங்கள் என்று பார்த்தால் உங்க அம்மா பழசு – உங்க அப்பா பழசு, வடிவேலுடன் தேங்காய்க்கு பேரம் பேசுவார், டாக்டர் நாக்கை நீட்ட சொன்ன இரண்டு அடிக்கு நீட்டும் காமெடி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
தற்போது வரை வடிவேல் அவர்களால் தான் என் வாழ்க்கை ஓடுகிறது எனவும் கண்கலங்கி கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தெளிவாக இன்று வரை தமிழ் என்னால் பேச முடியாது. அதனாலேயே தமிழ் ரசிகர்களுக்கு என்னை பிடிக்காமல் போனதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·