- · 5 friends
-
I
சமையலறையில் கண்டிப்பாக மருந்து மாத்திரைகளை வைக்ககூடாது
வாஸ்து ரீதியாக சில பொருட்களை சில இடங்களில் வைப்பது அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கும். அதேபோல சில பொருட்களை சில இடங்களில் வைப்பதால் துரதிர்ஷ்டங்கள் வந்து சேரும் என கூறப்படுகிறது.
வாஸ்துபடி தெரியாமல் கூட இந்த ஒரு பொருளை கிச்சனில் வைக்க கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். அப்படியான ஒரு பொருள் என்ன? அதன் பலன்கள் என்னென்ன? என்பதை தான் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
வாஸ்து ரீதியாக கிச்சனில் எப்பொழுதும் தண்ணீர் ஒழுகக் கூடாது. தண்ணீர் டேப் இருந்தால் அது சரியாக மூடப்பட்டு இருக்க வேண்டும். சொட்டு சொட்டாக தண்ணீர் வழிவது கடன் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும்.
குடும்பத்தில் அதீத கடன் பிரச்சினைகளுக்கு தண்ணீர் ஒரு காரணம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அது போல கிச்சனில் மருந்து மாத்திரைகளை வைக்கக்கூடாது. முதலுதவி பெட்டியை வைக்கக்கூடாது.
ஒரு வீட்டில் முதலுதவி பெட்டி என்பது அவசியமாக இருக்க வேண்டிய ஒரு பொருள் ஆனால் அதை கிச்சனில் வைத்தால் குடும்ப தலைவருக்கு ஆகாது என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது எனவே இதனை கொண்டு போய் கிச்சனில் வைத்து கொள்ளாதீர்கள்.
மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை கிச்சனில் அல்லது பூஜை அறையில் கண்டிப்பாக வைக்கவே கூடாது. இவற்றை வரவேற்பறை அல்லது படுக்கை அறையில் வைத்துக் கொள்ளலாம். மருந்து மாத்திரைகளை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது.
முதல் முதலாக மருத்துவ உதவிக்கு மருத்துவமனை செல்பவர்கள் சனிக்கிழமைகளில் செல்லாமல் இருப்பது நன்மை தரும். மருந்து மாத்திரைகளை பணத்துடன் சேர்த்து வைக்கவும் கூடாது. இதனால் பணம் சேராது என்கிற ஒரு குறிப்பு உண்டு. மருந்து மாத்திரைகளை வீணாக்கக்கூடாது.
ஒருவேளை மருந்து மாத்திரையை உட்கொண்டு விட்டு, உடல் நலம் தேறியதும் அதை அப்படியே குப்பையில் கொண்டு போய் கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மருந்து மாத்திரைகளை வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிப்பவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். தேவைக்கு மீறிய மருந்துகள் தேவையற்றது. அது பயனுள்ளவர்களுக்கு போய் சேரும்.
மருந்து மாத்திரைகளை வாங்குபவர்கள் கொடுக்கப்பட்ட நாட்களுக்கு குறைவாகவே வாங்குவது நல்லது. உங்களுக்கு தேவைப்பட்டால் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். அதை விடுத்து வீணாக குப்பையில் போட்டால் பாவம் வந்து சேரும். சமையல் அறையில் மருந்து, மாத்திரைகள் உடைய வாசம் வரக்கூடாது எனவே மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு என்று தனியாக ஒரு டப்பாவை வைத்துக் கொள்ள வேண்டும். அதை சமையலுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு மருந்து மாத்திரைகளை மூடி வைப்பது நல்லது. சிலர் பூச்சிக்கொல்லி மருந்து, ஆசிட் போன்றவற்றையெல்லாம் கிச்சனில் வைத்திருப்பார்கள். இவற்றையெல்லாம் கிச்சனில் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். சமையல் அறையில் அன்னபூரணி வாசம் செய்கிறாள், எனவே தேவையற்ற பொருட்கள் இருப்பது நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·