- · 5 friends
-
I

மூன்று நட்சத்திரங்கள் இணைந்து வரும் அக்டோபர் முதல் தேதி வாங்கவேண்டிய பொருள்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி சிறப்புகள் உண்டு. அந்த வகையில் சில நட்சத்திரம் வரும் நாளில் நாம் வாங்கும் பொருட்களாகட்டும் தொடங்கும் நல்லவைகளாகட்டும் நல்ல பலனை தரும்.
ஒரு சிலருக்கு ஒரு சில நட்சத்திரங்கள் மிகவும் அதிக பலனை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அக்டோபர் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை மூன்று நட்சத்திரங்களான அஸ்வினி, பரணி, ரேவதி ஆகியவை இணைந்து வருவது ஒரு அற்புதமான பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் சம்பாதித்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று நமக்கு இருந்தால் நம்முடைய வாழ்க்கையே மாறி விடும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே போல் பண தேவையானது ஒவ்வொரு மனிதருக்கும் இருந்து கொண்டே இருக்கும்.
தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைப்பது ஒரு வகை அதிர்ஷ்டமே. அந்த வகையில் மூன்று நட்சத்திரங்கள் இணைந்து வரும் நாளில் சில பொருட்களை வாங்கும் பொழுது நம்முடைய வீட்டில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி வாங்க வேண்டிய பொருட்களின் முக்கியமானது முகத்திற்கு பூசக் கூடிய மஞ்சள். வீட்டில் இருக்கக் கூடிய பெண்களுக்கு முகத்திற்கு பூசக்கூடிய மஞ்சளை இன்று வாங்கிக் கொடுப்பது பெரும் பலனை கொடுக்கும். இதை பெண்கள் தங்களுக்காக வாங்கிக் கொள்வதை காட்டிலும் ஆண்கள் பெண்களுக்காக வாங்குவது சிறந்தது.
அடுத்து வாங்க வேண்டிய பொருள் வெள்ளி. இதை வாய்ப்பிருப்பவர்கள் செய்யலாம். இன்றைய நாளில் வீட்டிற்கு வெள்ளிப் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் தரும். இதை ஆண் பெண் இருவருமே வாங்கலாம். சில பரிகார முறைகள் கேட்க எளிமையாகவும் விசித்திரமாக இருந்தாலும் செய்யும் பொழுது அதற்கான பலன் அதிகம் உண்டு.



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva