-
- · 3 friends

இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 13ஆம் திகதி | |
மேஷம் Aries
| விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
ரிஷபம் Taurus | குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
மிதுனம் Gemini | தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
கடகம் Cancer | விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் |
சிம்மம் Leo | குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடத்தில் வாதங்களைத் தவிர்க்கவும். உயர் கல்வியில் கவனம் வேண்டும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
கன்னி Virgo | சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் |
துலாம் Libra | கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை |
விருச்சிகம் Scorpio
| தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
தனுசு Sagittarius | எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். தாய் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கடியான சூழலை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
மகரம் Capricorn | மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் நம்பிக்கையும், மதிப்பும் மேம்படும். மனதளவில் புதிய தைரியம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை |
கும்பம் Aquarius | பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தடைபட்ட சில பணிகள் சாதகமாக முடியும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு |
மீனம் Pisces | சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva