Support Ads
- · 5 friends
-
I
படித்ததில் பிடித்தது
திருமணத்தில் உணவை பரிமாறும் விதமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அதுதான் தற்போதைய திருமணத்தில் நான் பார்க்கும் மோசமான விஷயமாக கருதுகிறேன் .
அந்த காலங்களில் திருமணம் என்றாலே மணமக்களின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்னாடியே வந்து தங்கி நெல்லு குத்தி , மாவரைத்து , அதிரசம் போன்ற பல பலகாரங்கள் பண்ணி பரிமாறி, உண்டு களித்து, வாராயோ தோழி வாராயோ தோழி , மணமகளே மணமகளே வா வா என பாடி மகிழ்ந்த நாட்கள் போய் இப்போ காது கிழியும் அளவிற்கு பாட்டுக்கச்சேரி அல்லது சவுண்ட் சிஸ்டம் வச்சி உணவு செய்து பரிமாறும் மூன்றாம் பணியாளர்கள் கொண்டு உணவு பரிமாறுவதும் அதிலும் சாப்பாட்டு பந்தியில் ஆள் வருவதற்கு முன்னாடியே எல்லா உணவையும் பரிமாறி அதில் ஈ, கொசு எல்லாம் உட்கார வைத்து அப்பப்பா தாங்க முடிவதில்லை இக்கால கல்யாண கூத்தை .
அதிலும் நின்றுக்கொண்டே சாப்பிடும் பப்பே முறை சகிக்காத ஒன்று . அது கூட பரவாயில்லை . அதிலும் பந்தியில் நாம் சாப்பிட்டு எழுமுன் அடுத்தவர் பின்னாடி சீட் பிடிக்க தயாராக இருப்பார் பாருங்க .. சாப்பிடும் நம்மளையே எப்படா சாப்பிட்டு முடிப்பான் என்று முறைத்துக்கொண்டு, முடியல சாமி . அசைவ உணவுகள் ஒரு சில திருமணங்களில் பரிமாறும்போது அப்போது சைவம் மட்டுமே சாப்பிடும் உறவினர்கள் படும் பாடு இருக்கே, அதை சொல்லி மாளாது . சைவ பந்தியை கவனிக்க ஆளே இருக்காது . அப்புறம் சாப்பிட்டு முடித்துவிட்டு குடிநீர் பாட்டிலை பாதி குடித்துவிட்டு மீதியை அப்படியே வச்சிட்டு போறது எனக்கு சுத்தமா பிடிக்காத ஒன்று...
தயவு செய்து மீதி தண்ணீரை கையில் எடுத்து போவது நல்லதே..
இலைபோட்டு அதில் அழகாக பந்தி பரிமாறி உறவினரை அது வேண்டுமா இது வேண்டுமா என்று பந்தியில் நின்று அன்புடன் விசாரிக்கும் தாய்மாமன்கள் சித்தப்பாக்கள் எல்லாம் இப்போது காண முடிவதில்லை . உறவினர் அனைவரும் சாப்பிட்டாங்களா என்று கவனிக்க கூட ஒரு சில திருமணங்களில் ஆளில்லை .
ஓரு சில திருமணங்களில் இப்போதெல்லாம் வரும்போது தாம்பூல பையுடன் மரம் வையுங்கள் என்று சின்ன செடிகளும் கொடுக்கிறார்கள் . அது வரவேற்க கூடிய விஷயம் . அப்படிபட்ட திருமணங்களில் நான் அவர்கள் தரும் செடி, மரமாகி, பூ பூத்து, காய் காய்த்து, கனியாகி வளர்வதைபோல மணமக்கள் வாழ்வும் ஆல் போல தழைத்து ஓங்கி வளர வேண்டும் என்று வாழத்திவிட்டு வருவதுண்டு.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·