-
- 3 friends
சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் டிசம்பர் மாதம் இடப்பெயர்ச்சி அடைய உள்ளதால் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சனி பெயர்ச்சியால் நல்ல வேலையும் புரமோசனும் யாருக்கு கிடைக்கும்?
மேஷம்:
11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். வக்ர நிலையில் இருந்த சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். நவம்பர் மாதம் முதல் உங்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வீட்டில் தடை பட்டு வந்த சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் தடைகள் நீங்கி இனிதே நடந்தேறும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
ரிஷபம்:
சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அதே சமயம் உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருந்து வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மிதுனம்:
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வருமானம் அதிகரிக்கும். கடன் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். திருமண சுப காரியம் கை கூடி வரும் அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். ஆட்சி பெற்ற சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்:
கண்டச்சனி காலமாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வீடு வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். வளமான வாழ்க்கையை சனி பகவான் தரப்போகிறார். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். சசமகா யோகம் கைகூடி வருகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றகரமான கால கட்டம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உயரதிகாரி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பார். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவை.
கன்னி:
உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். மாணவர்கள் நிறைய மதிப்பெண்களை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலம். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.
துலாம்:
வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்.
விருச்சிகம்:
தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அதிகரிக்கும். சசமகா யோகம் கைகூடி வந்துள்ளது. வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும்.
தனுசு:
எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மகரம்:
ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இந்த நான்கு மாத காலத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். அடுத்தவர்களின் குடும்ப விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம்.
கும்பம்:
ஜென்ம சனியால் பல சோதனைகளை சந்தித்து வருகிறீர்கள். புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியை தரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சம்பள உயர்வுடன் புரமோசன் கிடைக்கும். வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்வீர்கள்.
மீனம்:
சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது. ஆட்சி பெற்ற சனியால் விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும். நல்ல வேலை கிடைக்கும். கையில் வேலை கிடைத்த பிறகு இருக்கும் வேலையை விடுங்கள் அதுதான் நல்லது. செலவுகளால் கையில் இருக்கும் பணம் கரையும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·