- · 1 friends
-

உழைத்தால் உயர்வு உண்டு
ஐயா.. ரிடையர் ஆயிட்டீங்களா?
ஆமாப்பா.. தெடமாத்தான் இருக்கன்.. வயசாயிடுத்துன்னு தொரத்திட்டாங்க.. கொஞ்சம் காசு கொடுத்தாங்க.. 5 லட்சம்.. ஏதாவது தொழில் பண்ணணும்.. வீட்டுல சும்மா இருந்தா பொண்டாட்டி பாட்டு விடறா.. நைட்ல தூக்கம் வரமாட்டீங்குது..
ஏதாவது ஓட்டல் கடை வையுங்களேன்..
ஐயோ.. பர்சோட வந்தா பரவாயில்லை.. பட்டா கத்தியோட வந்து தின்னுபுட்டு. காசு கேட்டா. ரகளை பண்ணுவாங்கப்பா..
மளிகை கடை?
தெருவுல ரெண்டு சின்ன மால் இருக்கு.. அங்கதான் போயி கார்டு தேய்பபாங்க.. என்கிட்ட கடன்தான் கேப்பாங்க..வசூல் பண்ற தெம்பு இல்லை..
காய்கறி கடை?
வெள்ளன எழுந்து 3 மணிக்கு கோயம்பேடு போகணும்.. அதெல்லாம் தோது படாது..
அப்ப சரி.. தினமும் பத்து தெரு நடந்து சுத்துங்க.. நைட் தூக்கமும் வரும்.. தொழிலும் கிடைக்கும்..
எப்படிப்பா?
சொன்னதைச் செய்யுங்க.. ஒரு மாசம் கழிச்சி பார்க்கலாம்..
2 மாதம் கழித்து..
அவர் புது ஸ்கூட்டரில் வந்தார்..
என்ன அண்ணாச்சி.. எப்படி?
தெருவுல சுத்தும் போது.. நாலு வீட்டுல டுலெட் போர்டு பார்தேன்.. எங்கிட்ட வந்து வீடு இந்த ஏரியாவுல காலி இருக்கான்னு கேட்டவங்களுக்கு கொண்டு போயி காட்டி.. ஒரு மாசம் கமிஷன் வாங்கிட்டேன்....ஒரு அம்மாவுக்கு நெலம் வித்துக் குடுத்தேன்.. இப்போ நான் பிசிப்பா.. நைட் நல்லா தூக்கம் வருது.. டீ தர யோசனை பண்ணின பொண்டாட்டி இப்போ போர்ன்விட்டா போட்டுத் தரா.. என்றாரே பார்க்கணும்..