-
- 3 friends

இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 26, 2023
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 26, 2023
தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 9ஆம் திகதி | |
மேஷம் Aries
| உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பிடிவாதமாகச் செயல்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிலவர் நிறம் |
ரிஷபம் Taurus | நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் பிறக்கும். வசதிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
மிதுனம் Gemini | சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மனதில் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் விவேகம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் |
கடகம் Cancer | புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைகூடும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
சிம்மம் Leo | குடும்ப நபர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பணி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
கன்னி Virgo | நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவதில் விவேகம் வேண்டும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை |
துலாம் Libra | உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியான சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
விருச்சிகம் Scorpio
| உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
தனுசு Sagittarius | பொருளாதார நெருக்கடிகள் குறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
மகரம் Capricorn | பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
கும்பம் Aquarius | நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் புதிய பாதைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை |
மீனம் Pisces | மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·