- · 5 friends
-
I
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 . கோடி கோடியாக செல்வத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் தீபாவளிக்கு முன்பாகவே சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும், அதிர்ஷ்டமும், பதவியும், பண வரவும் வரும். நவம்பரில் இருந்து கோடி கோடியாக செல்வத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துக் கொள்வோமா?
மேஷம்:
ராகு கேது பெயர்ச்சி தீபாவளிக்கு முன்பாகவே உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. விரைய ஸ்தானமான 12 ஆம் இட ராகு குரு பகவானைப் போல விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ஆறாம் இட கேதுவும் அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு கோடி கோடியாக குவியப்போகும் பணத்தை பாதுகாப்பது அவசியம். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது.
ரிஷபம்:
ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிற்கும் வரப்போவதால் வெற்றிகள் வீடு தேடி வரும். சிறப்பான தன லாபம் கிடைக்கும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார்.
மிதுனம்:
பத்தில் ஒரு பாவி வந்தால் பதவி யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமரப்போகின்றனர். உங்களின் வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் தேடி வரும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சந்தோஷமாக அனுபவியுங்கள்.
கடகம்:
ராகு கேது பெயர்ச்சியால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமரப்போவதால் வெளிநாடு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் கைகூடி வரும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். சொத்து மேல் சொத்து சேரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்:
ராகு பகவான் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். குரு பகவான் போல செயல்படும் ராகு உங்களுக்கு கைநிறைய பணத்தை கோடி கோடியாக அள்ளித்தரப்போகிறார். பண முதலீடு விசயத்தில் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். குடும்ப விசயங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம். பண விசயத்தில் கவனம் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
கன்னி:
ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுககு திடீர் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமரப்போவதால் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகள் உங்களுக்கு தேடி வரும்.
துலாம்:
இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு வரப்போகிறார். ராகு பகவான் நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். விரைய ஸ்தானத்திற்கு கேது வரப்போவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்:
ராகுவும் கேதுவும் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமரப்போவதால் சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும்.
தனுசு:
இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்யப்போவது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புரமோசன் கிடைக்கும் பொருளாதார நிலை சீரடையும்.
மகரம்:
உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமரப்போகும் ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரப்போகும் கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்:
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வளர்ச்சியையும் குடும்பத்தில் நிம்மதியையும் ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போவதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். யாரை நம்பியும் பணத்தை கடனாக தர வேண்டாம். பணத்தை கடனாக கொடுக்கும் முன்பும் கடன் வாங்கும் முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
மீனம்:
ஜென்ம ராசிக்கு வரப்போகும் ராகுவினாலும் களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகும் கேதுவினாலும் நன்மை கலந்த தீமைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். பணம் விசயத்தில் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·