செருப்பு கடைக்கு ஒருவர் சென்றார்!!
பணியாளர் அவரை அமர வைத்து அவர் கேட்ட செருப்பை ஒன்று ஒன்றாக காலில் அணிவித்தார்!!
சற்றே அசௌரியமாக இருக்க அந்த நபர்! ஐயா கொடுங்கள் நானே அணிந்து கொள்கிறேன்!
நானும் மனிதன்! நீங்களும் மனிதர்! எதற்கு ஒருவர் காலை இன்னொருவர் தொட்டு!!
அதற்கு அவர்!!
ஐயா!! இதே கடைக்கு வெளியே என்றால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள் காலை நான் பிடிக்க மாட்டேன்!!
கடைக்கு உள்ளே ! ஒரு கோடி கொடுத்து நிறுத்த சொன்னாலும் என் வேலையை நிறுத்த மாட்டேன்! அது என் தொழில் தர்மம்! என்றார்.