-
- · 3 friends

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 - பதவி சுகத்தை அனுபவிக்கப் போவது எந்த ராசிக்காரர் தெரியுமா?
நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கும் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வருமா?
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசியில் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு ராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். நவம்பர் மாதத்தில் இருந்து ராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகம் உண்டு.



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva