- · 5 friends
-
I

புத்திமதி (குட்டிக்கதை)
ஒரு பெரிய மரத்தினடியில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.
அம்மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரிக்க எண்ணியது.
அப்போது ஒரு மூத்த காகம் ஒன்று...'அந்த மரத்தினடியில் பாம்பு புற்று இருக்கிறது.ஆகவே அம்மரத்தில் கூடு கட்டாதே' என்றது.ஆனால் மற்ற காகம் அதைக் கேட்கவில்லை.'
அடுத்த நாள் கூட்டினுள் முட்டையிட்டுவிட்டு காகம் உணவிற்காக வெளியே சென்றது.
காகம் இல்லாத நேரம் பொந்திலிருந்து ...பாம்பு ஒன்று மரத்திலேறி கூட்டினுள் இருந்த முட்டையைத் தின்றுவிட்டது.
வழக்கமாய் இது நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் மூத்த காகத்தின் புத்திமதியை தான் கேட்கவில்லை என நினைத்தது.
உடன் அதனிடம் சென்று நடந்ததைக் கூறி....ஆலோசனைக் கேட்டது.
மூத்த காகம் ...' நான் அப்போதே கூறினேன் நீதான் கேட்கவில்லை ..சரி...இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு....அந்த நாட்டு ராணி குளிக்கும் தடாகத்திற்குச் சென்றது.
ராணி தன் முத்துமாலையைக் கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். மூத்த காகம் அந்த மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது.
ராணி கூச்சலிட, வெளியேயிருந்த சேவகர்கள் உடனே காகத்தின் பின்னே ஓடினர்.மூத்த காகம் மரத்தினடியில் வந்து மாலையை புற்றினுள் போட்டது.
வந்த சேவகர்கள் பாம்பு புற்றை வெட்டினர். மாலையை எடுக்கும்போது பாம்பு வெளியே வந்தது.அதையும் வெட்டிக் கொன்றனர்.
அதற்கு பின் காகம் இடும் முட்டைகள் திருட்டு போகாமல் குஞ்சுகளாக வெளியே வந்தன. நாமும் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரை படி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·