- · 5 friends
-
I

விநாயகர் சதுர்த்தியன்று எந்த பிள்ளையாரை வாங்கவேண்டும்?
விநாயகரை நாம் முறையாக வழிபாடு செய்து, சில வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளும் போது நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீரும். விநாயக சதுர்த்தியில் அனைவர் வீட்டிலும் புதுசாக பிள்ளையாரை வாங்கி வந்து வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும்.
நம்முடைய வீட்டிற்கு எப்படிப்பட்ட பிள்ளையாரை வாங்கி வர வேண்டும், வாங்கி வந்த பிள்ளையாரை பூஜை அறையில் எப்படி அமர வைக்க வேண்டும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கூடவே சேர்த்து இந்த ஒரு புதுமையான விஷயத்தையும் முயற்சி செய்து பாருங்கள். இந்த வருடம் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பண கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும்.
பிள்ளையாரில் இரண்டு வகை பிள்ளையார் உள்ளது. வலம்புரி விநாயகர். இடம்புரி விநாயகர். கடைக்கு சென்று வலம்புரி விநாயகர் கிடைக்கிறாரா என்று பாருங்கள். முடிந்தால் இந்த வலம்புரி பிள்ளையாரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். நாம் எல்லோருக்கும் தெரியும் இடம்புரி விநாயகர் சிலை தான் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், முடிந்தால் மட்டும் இந்த வலம்புரி விநாயகரை வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். கிடைக்காத பட்சத்தில் இடம்புரி விநாயகரை வாங்கிக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் கிடையாது. நாளை வலம்புரி பிள்ளையாரை வீட்டிற்கு கொண்டு வந்து வழிபாடு செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.
நீங்கள் வாங்கக் கூடிய விநாயகர் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகராக இருக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கூடுமானவரை பேரம் பேசாமல் வாங்கி வீட்டிற்கு எடுத்து வரவும். இந்த விநாயகரை வாங்கும் போது கூடவே சேர்த்து எருக்கன் மாலையையும், அருகம்புள்ளையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
விநாயகரை வாங்கிவிட்டு மற்ற பூஜை பொருட்கள் வாங்க, மற்ற கடைகளுக்கு அலைந்து திரிய வேண்டாம். விநாயகரை வாங்கினால் அவரை மனப்பலகையில் அமர வைத்துவிட்டு நேரடியாக வீட்டிற்கு தான் கொண்டு வர வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து அந்த மஞ்சள் தண்ணீரை விநாயகர் மேல் தெளித்து விநாயகரை சுற்றி தெளித்து விட்டு பிறகு வீட்டிற்குள் விநாயகரை மன மகிழ்ச்சியோடு பக்தியோடு எடுத்து வர வேண்டும்.
வாங்கி வந்த விநாயகரை, பூஜை அறையில் தான் அமர வைக்க வேண்டும். வீட்டில் மற்ற இடங்களில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் வைத்த விநாயகருக்கு உங்களுக்குத் தெரிந்த அலங்காரங்களை பூக்களை கொண்டு, அருகம்புல்லை கொண்டு, எருக்கன் பூவைக் கொண்டு செய்து விடுங்கள்.
சில பேர் வீடுகளில் பிள்ளையாரின் தொப்பையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கக்கூடிய பழக்கம் இருக்கும். ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளையார் தொப்பையில் வையுங்கள். வைப்பதற்கு முன்பு நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இதுதான். கொஞ்சமாக வசம்பு பொடியை பிள்ளையாரின் தொப்பையில் தடவி விட்டு, இந்த ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளையார் தொப்பையில் கொஞ்சமாக தண்ணீர் தொட்டு ஒட்டி வைத்தால் ஒட்டிக் கொள்ளும்.
பிள்ளையாரிடம் மனதார உங்களுக்கு பண வசியம் ஏற்பட வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பிறகு வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பிள்ளையாருக்கு பிடித்த பலகாரங்களை எல்லாம் நிவேதனமாக வைத்து, சந்தோஷமாக குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை முடித்து விடுங்கள்.
பிள்ளையாரை கொண்டு போய் தண்ணீரில் போடுவதற்கு முன்பாக பூஜை செய்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியில் போட்டு பணம் வைக்கும் பெட்டியில் இந்த ஒரு ரூபாயை வைத்தால் பணவசியம் ஏற்படும். இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களும் உங்களை தேடி வரும். பிள்ளையாரும், அந்த ஒரு ரூபாயில் வசியமாகியிருப்பார். அந்த வேலையைத்தான் அந்த வசம்பு பொடி செய்யப் போகின்றது. அதற்குத்தான் வசம்பு பொடி பரிகாரம்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் உங்கள் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை, அந்த விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தீர்த்து வைத்திருப்பார்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
