- · 5 friends
-
I
தேங்காய் சட்னி சுவையாக இருக்க காரணமான இரண்டு பொருள்கள்
சட்னி வகைகளை நாம் வீட்டில் செய்வதற்கும் ஹோட்டல்களில் செய்வதற்கு நிறையவே வித்தியாசம் உண்டு. ஒரே தேங்காய் சட்னியை நாம் வீட்டில் அரைக்கும் போது ஒரு விதமாகவும், ஹோட்டலில் செய்யும் போது ஒரு விதமாகவும், வெளியில் ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்னி வேறு விதமாகவும் இருக்கும். உடுப்பி ஹோட்டல்களில் செய்யப்படும் தேங்காய் சட்னி எப்படி அரைப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு கைப்பிடி அளவு புதினாவையும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக தேங்காய்யை துருவி மூன்று டேபிள் ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பிரஷ்ஷாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் பின்புறம் இருக்கும் கருப்பு நிறத் தோல் வராமல் துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து லேசாக நிறம் மாறாதவாறு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதே கடாயை அடுப்பில் வைத்து நான்கு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் அதிகம் தேவை என்பவர்கள் பச்சை மிளகாயின் அளவை கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் பச்சை மிளகாயுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய சைஸ் புளியை இதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.
மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்தவற்றை சேர்த்த பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தேங்காயையும் சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சட்னி அரைத்த பிறகு கடைசியாக முதலில் வதக்கி வைத்த புதினா கொத்தமல்லியை சேர்த்த பிறகு இப்போது அதிகம் அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துப் பிறகு இந்த ஒரு பவுலில் மாற்றி விடுங்கள்.
இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை சேர்த்து விடுவோம். அதற்கு அடுத்து தாளிப்பு கரண்டியை வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு காய்ஞ்ச மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள். சட்னியில் நாம் கொத்தமல்லி புதினா இலை இரண்டும் சேர்த்ததுதான் இதன் தனி சுவைக்கு காரணம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·