Support Ads
 ·   ·  2155 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சங்கடந்தீர்க்கும் சனிபகவான்

சங்கடந்தீர்க்கும் சனிபகவானே 

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் 

சச்சரவின்றிச் சாகா நெறியில் 

இச்சகம் வாழ இன்னருள் தாதா

மாமன்னர்களையும், மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான். இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார். 

அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான். காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர். நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.

எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள். ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும். 

காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும். செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும். 

துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார். ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின், அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம். 

வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம். சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது. இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும். மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே. 

சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும். வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார். இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது. 

1. திருநள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனி பகவான் மூலவரையும் தீபமேற்றி தரிசித்து விட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)

2. பித்ரூ பூஜை, சனி பகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை ஆகும் என்று நாரத மகரிஷி கூறுவதாக புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காக தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.

3. சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.

4. சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.

5. எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.

 

6. வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.

7. தினமும் சனி துதியையும், சனி காயத்ரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்) இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.

  • 136
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங