- · 6 friends
-
S
N
R
முருகன் கோயிலில் போராடி தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதி
தமிழ் முறைப்படி திருமணம் நடத்த தடை விதித்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் எனப் பலதரப்பு தடைகளை உடைத்து, க.பரமத்தி சாலையில் உள்ள பவித்ரம் பாலமலை பாலமுருகன் திருக்கோயிலில் வெற்றிகரமாக ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.
பாலமலையில் உள்ள பாலமுருகன் திருக்கோயில், தமிழக அளவில் பிரசித்திபெற்ற முருகன் கோயில். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும், சம்ஸ்கிருத முறைப்படிதான் நடத்தி வருகிறார்கள்.
தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது என்று உறுதியுடன் போராடியதால், முதலில் 'கோயில் அடிவாரத்தில் நடத்திக்கொள்ளுங்கள்' எனக் கோயில் நிர்வாகம் கூறியது. 'இது எங்களின் உரிமை' எனக் கூறி உறுதியுடன் போராடினோம். அதனால், வேறுவழியின்றி, 'அதிகாலையில் முதல் திருமணமாக 10 நிமிடத்தில் மலைக்கோயிலில் கண்ணன், பவானி திருமணத்தை நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும்' என்று வாய் வழியாகக் கூறி, வேண்டா வெறுப்பாக அனுமதி அளித்தனர். நாங்கள் இதுபோன்ற தமிழ்முறை திருமணத்தை நடத்துவதைப் பார்த்து, வேறு யாரும் அப்படி நடத்த வேண்டும் எனக் கூறி விடக்கூடாது என்பதற்காகவே, கோயில் நிர்வாகம் இவ்வாறு கூறி அனுமதி கொடுத்தது என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ராஜேஷ் கண்ணன் கூறினார்.
'பாலமலை முருகன் கோயிலில் தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது' என உறுதியுடன் மணமக்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருந்ததால், அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலமலை பாலமுருகன் மலைக்கோயிலில், உப்பிடமங்கலம் சிவனடியார்கள் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·