Support Ads
Main Menu
 ·   · 95 posts
  •  · 2 friends
  •  · 2 followers

ருசியான சமையல் – சில ரகசியங்கள்

சாம்பாரை  இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு  ருசியாகவும்  வாசனையாகவும் இருக்கும்.

நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு,  நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.

இட்லிப்பொடி  அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.

ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.

எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான  வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.

இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.

* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.

* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.

* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.

* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.

* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.

* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.

* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.

* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.

* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.

* எள்ளுக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.

* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.

* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.

* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.

* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.

* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.

* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.


0 0 0 0 0 0
  • 126
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
இராவணனிடம் உபதேசம் பெற்ற இராமன்
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட இராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவ
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மருத்துவர்கள்  கூறும் அறிவுரை!
உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.ஆரோக்கியமான உணவ
சிவபார்வதியின் முன் காலை நீட்டிய அவ்வை.!!
  •  · 
  •  · beesiva
ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித
குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான வ
மாற்றங்கள் எப்படி ஏற்படும்?
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!நீங்களும் எங்களோடு வந்தால் நன்றா
கோவில் வாசற்படியை மிதித்து உள்ளே செல்வது சரியா?
கோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா?
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்
  •  · 
  •  · beesiva
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு  ......உண்பவர்களா..... சைவர்கள்
எங்கே செல்கிறோம்?
சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழம
திருப்பதியில்கோடி கோடியாய் கொட்டிய பணம்
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்
எனது  அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது.
           கனடாவை  சேர்ந்த  வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன்  ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சுமார் 200 கு
தோட்டத்தில் இரகசியமாக தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
கம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை த
Ads
Latest Posts
ஶ்ரீராமாவதாரம் & ஶ்ரீகிருஷ்ணாவதாரம் வித்தியாசங்கள்....
உபன்யாஸத்தில் கேட்டது : 1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.3.ஶ்ரீராம
ஓம் சாய்ராம்
சத்குருவே... சரணம்.
பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கரவாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.போகும் வழ
ஆண்டாளின்  பெருமை பேசும் ஶ்ரீவில்லிப்புத்தூர்
'கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்' என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் அ
நமது முன்னோர்கள் அறிவாளிகள்....
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள்தான் சித்திரை திங்கள் முதல் நாள்.எனவேதான் தமிழர்கள் சித்திரை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுகின்றனர் !!பல ஆயி
கந்தசஷ்டிகவசம் படிக்கலாம்.....
ஐரோப்பா கண்டமே கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமும் உரிய பலனளிக்கா நிலையில் தெய்வத்திடம் ஓங்கி மன்றாட தொடங்கி விட்டது,அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்க
"தலைவி" பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள படம் ‘தலைவி’. இந்த படம் இந்தி மற்றும் தமிழில் வரும் ஏப்ரல் 2
மொபைல் போன்களை பற்றிய பெறுமதியான தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்....
மொபைல் போன்களை பற்றிய பெறுமதியான தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்....*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க#*2472
யுகாதி மகத்துவங்கள்
சிவபெருமான் ஜடாமுடியில் இருக்கும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும் உண்டாகும் என்பது நியதி. மூன்றாம் பிறைச்
நடிகரை கிண்டல் செய்த மேயாதமான் படம் நடிகை!
நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் நட
நடிகை த்ரிஷா மீது பட அதிபர் புகார்! த்ரிஷாவுக்கு தடை விதிக்கப்படுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் த்ரிஷா. தற்போது இவருடைய பரமபதம் படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.  இந்த படத்தில் அவருடன்
படித்தேன்... பகிர்கிறேன்...
உடலில் ஆக்சிஜன் அளவு 98 - 100 க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;ORAC-Oxygen
Ads