·   ·  961 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.....

நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும், ஒரு காலாவதி நாள் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்..!!

டூத்பிரஷ்..  

மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும். இல்லையேல் இதனால் கூட நோய் தொற்று, உடல்நலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

முக்கியமாக குழந்தைகள் உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

தலையணை.. 

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய தலையணை மாற்ற வேண்டும். ஒன்று, அதன் வடிவம் மாறி கழுத்து வலி உண்டாக காரணியாக இருக்கும். மற்றொன்று வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான். அதன் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்த இரண்டு - மூன்று வருட இடைவேளையில் சீராக அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம். கடைசியாக உங்கள் வீட்டு தலையணையை எப்போது துவைத்தீர்கள்? மாற்றினீர்கள்?

உள்ளாடை..

வருடத்திற்கு ஒருமுறை மாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை பிறப்புறுப்புகளில் ஏற்படும். முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஆண் தினமும் காலையில் சுத்தமாக உள்ளாடை அணிவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது.

குளியல் டவல்.. 

வருடத்திற்கு ஒருமுறை குளியல் டவலை மாற்ற வேண்டும். குளியல் டவலில் சீக்கிரம் ஃபைபர் தன்மை இழப்பு நேரிடும். இதனால் அதில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க துவங்கும். நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும், அதில் பாக்டீரியா தான் அதிகரிக்குமே தவிர, உங்களுக்கு நன்மை விளைவிக்காது.

ஃபீடிங் நிப்பிள்.. 

குழந்தைகளுக்கு பால் தர, அழாமல் இருக்க நாம் பயன்படுத்தும் ஃபீடிங் நிப்பிளை நான்கு அல்லது எட்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் கிழிசல், கிராக் போன்றவை குழந்தைகளுக்கு சுகாதாரமற்றதாக மாறும். எனவே, ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அதை கட்டாயம் மாற்ற வேண்டும்.

சீப்பு..

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சீப்பை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் கழிவறைக்கு இணையாக அழுக்கு சேரும் இன்னுமொரு பொருள் சீப்பு தான். முக்கியமாக வீட்டில் அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது அவசியம்.

காலணிகள்.. 

ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி காலணிகளை கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று/பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. 

ஸ்பாஞ்ச்..

பாத்ரூம், கிச்சன், தரைகள் துடைக்க, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லையேல் ஃபங்கஸ் தொற்று அதிகரிக்கும். முக்கியமாக இதன் காரணத்தால் வீட்டில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சுத்தம் செய்யும் பொருட்கள்..

வீடு, கழிவறை, தரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ், குச்சிகள், கையுறைகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதிகமாக கெமிக்கல் ஒட்டும் காரணத்தால் இவை சுகதாரமற்ற பொருளாக வீட்டில் அண்டியிருக்கும்.

ஷூ..

ரன்னிங் ஷூக்களை வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நீங்கள் கேசுவலாக பயன்படுத்தும் ஷூக்களை விட அதிக வியர்வை உறிஞ்சுகிறது ரன்னிங் ஷூ. எனவே, உங்களுக்கே தெரியாமல் அதில் பாக்டீரியாக்கள் அதிகமாக அண்டியிருக்கும்.

விரிப்பு..

மெத்தை விரிப்பு நம்மில் பலரும் பல வருடங்கள் மாற்றாமல் பயன்படுத்தும் பொருள். ஐந்தில் இருந்து எட்டு வருடத்திற்கு ஒருமுறை மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மெத்தை விரிப்பை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.

டெப்லான் பேன்..

வீட்டில் சமையல் செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல, சமையல் செய்ய நாம் உபோயோகப்படுத்தும் பாத்திரங்களுக்கும் கூட காலாவதி நாள் இருக்கிறது. டெப்லான் பாத்திரங்களை மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

பிளாஸ்டிக்..

பிளாஸ்டிக் டிப்பன் பாக்ஸ்களை தான் இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் வாங்கி தருகிறார்கள். பல டிசைன், வடிவங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லையேல் நச்சு தன்மை அதிகமாகிவிடும்.

கம்பளம்..

கால் துடைக்க பயன்படுத்தும் கம்பளத்தை இரண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அவ்வப்போது சீரான இடைவேளையில் சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் அதிகமாக பாக்டீரியாக்கள் தாங்கும் பொருள் கம்பளம் தான்.

  • 362
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்