-
- · 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூன் 6, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் - ஜூன் 6, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 23ஆம் திகதி | ||
| ஆடியோ வடிவில் கேட்க … | |
மேஷம் Aries | மதிப்பு நிறைந்த நாள் இன்று. சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். பண வரவுகளால் திருப்தி உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
ரிஷபம் Taurus | விவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் தாமதமாகும்.
அதிர்ஷ்ட எண் :8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மிதுனம் Gemini | வெற்றி நிறைந்த நாள் இன்று. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
கடகம் Cancer | அசதிகள் குறையும் நாள் இன்று. உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா | |
சிம்மம் Leo | நன்மை நிறைந்த நாள் இன்று. வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நெருக்கமானவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் :3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
கன்னி Virgo | அமைதி நிறைந்த நாள் இன்று. பணம் தொடர்பான நெருக்கடிகள் விலகும். தாய் வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கலை பொருட்கள் மீதான ஆர்வம் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். வேலையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு | |
துலாம் Libra | சாதனை நிறைந்த நாள் இன்று. போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். எழுத்து தொடர்பான துறைகளில் அங்கீகாரம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
விருச்சிகம் Scorpio | ஓய்வு நிறைந்த நாள் இன்று. சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
தனுசு Sagittarius | இன்னல்கள் விலகும் நாள் இன்று.பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
மகரம் Capricorn | முயற்சிகள் அதிகரிக்கும் நாள் இன்று. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வாகன பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் குழப்பங்கள் நேரிடும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
கும்பம் Aquarius | ஊக்கம் நிறைந்த நாள் இன்று. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்..
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் | |
மீனம் Pisces | நன்மை நிறைந்த நாள் இன்று. உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
