-
- 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூன் 4, 2023
இன்றைய ராசி பலன் - ஜூன் 4, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 21ஆம் திகதி | ||
| மேஷம் Aries | விவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று. எண்ணிய சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களை நம்பி வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் நேரிடலாம். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை |
ரிஷபம் Taurus | நன்மை நிறைந்த நாள் இன்று. நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் :5 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு | |
மிதுனம் Gemini | பிரச்சனைகள் குறையும் நாள் இன்று. உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை கிடைக்கும். அனுபவ பேச்சுக்களின் மூலம் காரியத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்..
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கடகம் Cancer | சிக்கல்கள் விலகும் நாள் இன்று. செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு | |
சிம்மம் Leo | கவலைகள் குறையும் நாள் இன்று. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சிறு சிறு வாதங்கள் தோன்றி மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் :3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
கன்னி Virgo | பக்தி நிறைந்த நாள் இன்று. திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தந்தையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் புதுமையான அனுபவம் ஏற்படும். புதிய தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
துலாம் Libra | நட்பு நிறைந்த நாள் இன்று. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது.உயர் அதிகாரிகளால் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
விருச்சிகம் Scorpio | அன்பு நிறைந்த நாள் இன்று. பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உடன்பணிபுரிவர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் | |
தனுசு Sagittarius | வெற்றி நிறைந்த நாள் இன்று. பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
மகரம் Capricorn | அமைதி நிறைந்த நாள் இன்று. குழந்தைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் நன்மை ஏற்படும். மனதில் புதுவிதமான தெளிவு பிறக்கும். உத்தியோக பணிகளில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கும்பம் Aquarius | தெளிவு நிறைந்த நாள் இன்று. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சுபகாரிய பயணங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
மீனம் Pisces | மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் அணுசரணையாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ஊதா |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·