- · 5 friends
-
I
விரைவில் கருத்தரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சனையை உண்டாக்குகின்றன.
ஆகவே கருத்தரிக்க முயற்சிப்போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் ஒருசில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, ஈ டி மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளன.
எனவே அதனை வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பம் அடைய முடியும். இப்போது கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகளைப் பார்ப்போம்
இந்த ரெசிபியை ஆண் மற்றும் பெண் இருவருமே சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் உள்ள முட்டை மற்றும் காளானில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் ஜிங்க் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், விரைவில் கர்ப்பமாகலாம்.
கருத்தரிக்க முயலும் போது, காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். மாதுளையில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை தினமும் பருகி வர வேண்டும். இதனால் விரைவில் கர்ப்பமாகலாம்.
கருத்தரிப்பதை அதிரிப்பதில் சால்மன் மீன் முதன்மையானது. அதிலும் அந்த சால்மன் மீனை கழுவி, அதில் இஞ்சியை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்து, க்ரில் செய்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
சீஸில் பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான கால்சியம் அதிகம் இருப்பதால், இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்தது.
அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் ஆயில், மிளகாய் தூள் மற்றும் பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் க்ரில் செய்து சாப்பிட்டால், சுவையுடன் இருப்பதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, மாலையில் குடித்து வந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
செலரிக் கீரை
இந்திய மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்.
வெண்ணெய் பழம்/அவகேடோ
பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன.
கடல் சிப்பி
பெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.
முட்டை அனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது. முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது.
இறாலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. எனவே அந்த இறாலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் எலுமிச்சை சாறு, பூண்டு மற்றும் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் வறுத்து சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரித்து, விரைவில் கருத்தரிக்க முடியும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·