·   ·  152 posts
  •  ·  1 friends
  • 1 followers

உலகின் மிகப்பெரிய கப்பல்

படத்தில் நீங்கள் காண்பது ஒரு நகரத்தின் காட்சி அல்ல...

இது உலகின் மிகப்பெரிய கப்பலான (Icon of the Sea) எனப்படும் உல்லாசக் கப்பலாகும். பின்லாந்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான (Royal Caribbean International) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கப்பல் டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதாகும்....

இந்தக் கப்பலில் ஆறு நீர் சறுக்குகள், ஏழு நீச்சல் குளங்கள், ஒரு பனி வளையம், ஒரு தியேட்டர் மற்றும் 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன....

ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தக் கப்பலின் கட்டுமான பணி முடிவடைய 900 நாட்களுக்கு மேல் ஆனது. இதன் மொத்த எடை 250,800 டன்களாகும்.....

20 தளங்களைக் கொண்டுள்ள இக்கப்பலில் 2,350 பணியாளர்கள் பணிபுரிவதோடு 8,000 பயணிகள் பயணிக்க முடியும்.. இந்த மாபெரும் கப்பல் ஜனவரி 27, 2024 அன்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.....

  • 688
  • More
Comments (0)
Login or Join to comment.