-
- 3 friends

இன்றைய ராசி பலன் – மே 29, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் – மே 29, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 15ஆம் திகதி | ||
| மேஷம் Aries | தெளிவு நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
ரிஷபம் Taurus | விவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று. உடல் ஆரோக்கியம் மேம்படும். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பண வரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும்..
அதிர்ஷ்ட எண் :1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
மிதுனம் Gemini | சிக்கல்கள் விலகும் நாள் இன்று.குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
கடகம் Cancer | பெருமை நிறைந்த நாள் இன்று. பண வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் | |
சிம்மம் Leo | மனம் நிறைவு பெறும் நாள் இன்று. பார்வை தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். கற்றல் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் :3 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கன்னி Virgo | பொறாமை குறையும் நாள் இன்று. செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
துலாம் Libra | மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
விருச்சிகம் Scorpio | செல்வாக்கு அதிகரிக்கும் நாள் இன்று. சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
தனுசு Sagittarius | மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். செய்யும் செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணங்கள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
மகரம் Capricorn | செலவுகள் நிறைந்த நாள் இன்று. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
கும்பம் Aquarius | கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு | |
மீனம் Pisces | ஆக்கப்பூர்வமான நாள் இன்று. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·