Support Ads
Main Menu
 ·   · 109 posts
  •  · 2 friends
  •  · 2 followers

எங்கே செல்கிறோம்?

சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில் அந்த நாட்டிலேயே வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருசிலர் காலப்போக்கில் அந்த நாட்டிலேயே தொடர்ந்திருப்பதால் தமது சொந்த தாய்நாட்டையும் மறந்து விடுகின்றனர். என்ன தான் அயல்நாட்டில் வேலை, தொழில் போன்ற சொந்த காரணங்களுக்காக தங்கி விட நேர்ந்தாலும் சொந்த மண்ணை மறப்பது சரியா?

ஆடை மாற்றம், பழக்க வழக்கங்களில் மாற்றம், உண்ணும் உணவில் மாற்றம், பேசும் பேச்சில் மாற்றம், மொழியில் மாற்றம் என பலவகையில் மாறினாலும் சொந்த மண்ணையும், தாய்மொழியான தமிழ் மொழியையும் மறக்கலாமா? இது அயல்நாட்டில் இருக்கும் அனைவரையும் குறிப்பதற்காக சொல்லவில்லை. ஒருசிலர் இந்த மாற்றங்களினால் தாங்களும் மாறிப்போய் தங்களுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களையும் மாற்றிவிடுகிறார்கள்.

அயல்நாட்டில் கடினமாக உழைத்து வளர்ந்து விட்ட மற்றும் வளர்ந்து வரும் பலர் செல்வ செழிப்பில் கேளிக்கை விருந்து என்ற பெயரில் மது மற்றும் இதர போதை வஸ்துக்களுக்காக அதிகம் செலவழித்து வருகின்றனர். இம்மாதிரி அநாவசியமான செலவுகளை மனமார உணர்ந்து, அதை குறைத்துக் கொள்ளலாம். படிப்படியாக அந்த அநாவசிய செலவுகளை நிறுத்தவும் முயற்சி எடுக்கலாம்.

நமது தாய்மண்ணில் சரியான தொழில் இன்றி, வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரத்திற்கு சங்கடப்பட்டு கொண்டிருக்கும் உடன்பிறவா சகோதரர்களுக்கு வழிகாட்ட இந்த தொகையை பயன்படுத்தலாம். நீங்கள் மட்டும் இந்த மனமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களின் நண்பர்களையும் நட்புரிமையுடன் இதற்கு உட்படுத்தலாம். நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி எடுத்து, குழுவாக சேர்ந்து இம்மாதிரி உதவிகளை செய்யலாம்.

‘பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’ என்னும் பழமொழிக்கேற்ப வேலைவாய்ப்போ அல்லது தொழிலோ இல்லாமல் சிரமபட்டு வரும் நமது தாய்மண்ணில் வசித்து வரும் உடன்பிறவா சகோதரர்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதும் உதவிகள் செய்யலாம்.

எங்கே தமிழ்?

அயல்நாட்டிற்கு சென்று அங்கேயே தொடர்ந்து வசித்து வரும் தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கவும் மறந்து விடுகின்றனர். எந்த நாட்டில் வசிக்கிறார்களோ அந்த நாட்டு மொழியிலோ சரளமாக பேசும் அந்த குழந்தைகள் தமிழ் மொழியினை பேச தெரியாமல், படிக்க தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அப்பா, அம்மா என்று கூட சொல்லத் தெரியாமல் வளர்த்து வருகிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

“தமிழ் வளர்ப்போம்” என கூட்டங்களிலும், விருந்துக் கூட்டங்களிலும் மட்டும் முழங்கிடமாமல், தமிழ் வளர்க்க ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டும். இதை வீட்டிலிருந்தே தொடங்கலாம். என்ன தான் நேரமின்மை இருந்தாலும், குழந்தைகளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழை கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இது நாம் நம் தமிழ் மொழிக்கு செய்யும் கடமையாகும். காலத்தின் கட்டாயமும் கூட.

சொந்தமண்

எங்கு தான் இருந்தாலும் சொந்த நாட்டிற்கு, சொந்த மண்ணிற்கு நேரம் கிடைக்கும் போது குழந்தைகளுடன் சென்று வருவது நல்லது. இதற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளும் அவர்களுடைய தாத்தா, பாட்டி மற்றும் சொந்த பந்தங்களை பற்றியும் நமது தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் பற்றியும் புரிந்து கொள்வார்கள். தமிழையும் ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள்.

நீங்கள் அனுபவித்திட்ட தாத்தா, பாட்டி கதைகளையும், அவர்களது அருகாமையையும், வளரும் தலைமுறையும் அனுபவித்திட எண்ணுங்கள். நீங்கள் சிறுவயதில் ருசித்து சாப்பிட்ட பாராம்பரிய உணவு வகைகளை வளரும் தலைமுறையும் ருசித்திட எண்ணுங்கள்.

ஏதோ பிறந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், தாய்மண்ணில் உள்ள ஒரு சகோதரனையாவது முன்னேற்ற முயற்சி எடுங்கள். இக்கட்டுரையை படித்துவிட்டு, யாரொருவர் யோசித்து மனமார உதவிட முடிவெடுக்கிறார்களோ அதுவே கட்டுரையாளரின் வெற்றி.

- பா. சிவசங்கரன்.



*************************************************************************************************************

அன்பர்களே.
கட்டுரையைப் படித்து விட்டு உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள்.

உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.......

0 0 0 0 0 0
  • 162
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
இராவணனிடம் உபதேசம் பெற்ற இராமன்
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட இராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவ
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மருத்துவர்கள்  கூறும் அறிவுரை!
உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.ஆரோக்கியமான உணவ
சிவபார்வதியின் முன் காலை நீட்டிய அவ்வை.!!
  •  · 
  •  · beesiva
ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித
குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான வ
மாற்றங்கள் எப்படி ஏற்படும்?
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!நீங்களும் எங்களோடு வந்தால் நன்றா
கோவில் வாசற்படியை மிதித்து உள்ளே செல்வது சரியா?
கோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா?
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்
  •  · 
  •  · beesiva
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு  ......உண்பவர்களா..... சைவர்கள்
எங்கே செல்கிறோம்?
சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழம
திருப்பதியில்கோடி கோடியாய் கொட்டிய பணம்
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்
எனது  அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது.
           கனடாவை  சேர்ந்த  வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன்  ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சுமார் 200 கு
தோட்டத்தில் இரகசியமாக தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
கம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை த
Ads
Latest Posts
எது கெடும் ? - ஔவையார் கூறியது....
கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......(01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெ
சக்தி வாய்ந்த மந்திரம்
ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை
அனுமனை பிடித்த சனீஸ்வரர்
ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும்
வணங்குவோம்.....
ஸ்ரீராமா.....
அறிவோம் - சிவபுராணத்தின் பெருமைகள்
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.2. வந்தவர் ம
விந்தணுக்களை அதிகரிக்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
  •  · 
  •  · beesiva
விந்துவைக் கெட்டியாய் ஆக்கிவிடும் வெண்டைக்காய்,கூட்டி விடும்வெண்டைப் பிஞ்சு.அதிமதுரம் சேர்த்தால் பெருகும் புதுஉதிரம்,சர்வமும் சீராகும் ஆம்.கருத்தரிக்க
துளசிதேவியின் மகிமை
துளசியின் மகிமையை முழுவதும் வர்ணிக்க இயலாது என்றாலும், பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்...ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும
சுகம் தரும் அசோகாஷ்டமி
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில்வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்ப
கிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்?
கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.கிணறுகள் எங்கு இ
இதய நோய்களை தீர்க்கும் கோவில்.......
இதய நோய்களை தீர்க்கும் கோவில்.......
அறிவோம் ஆன்மீகம்.......
திருவண்ணாமலை.....
விதி ......
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்..ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது..அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது ப
Ads