17 வயது பூர்த்தியடைந்தவர்கள் சாரதி விண்ணப்பத்தை பெற பயிற்சி பெறலாம் - உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதிலுள்ள நடைமுறை குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
17 வயது பூர்த்தியடைந்தவர்கள் சாரதி விண்ணப்பத்தை பெற பயிற்சி பெறலாம். எனினும் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் ஆணையாளர் நாயகம் நிஷாத்ன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஓட்டுநர் உரிமத்தில் பயிற்சியாளரின் பெயரையும் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடைமுறை முன்னெடுப்பதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
வாகன விபத்துக்களை குறைப்பதற்கு இந்த புதிய முறைமை பயன்படுத்தப்படும் எனவும், இதன் போது பயிற்றுவிப்பாளர் யார் என்பதையும் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000