Ads
ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வௌியான தகவல்
இன்று (28) பிற்பகல் வேளையில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் வழமைக்குத் திரும்பும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் விமான நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இன்று இணைந்து கொண்ட விமான சேவையின் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைகளில் தாமதங்கள் மற்றும் சில விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பிரச்சினை உக்கிரடைந்துள்ளது.
நேற்று (27) மாத்திரம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதுடன் கிட்டத்தட்ட 03 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
Info
Ads
Latest News
Ads