கமராவினுள் சிக்கும் வீதி ஒழுங்கு சட்ட மீறல்களில் புதிய நிபந்தனை
கனடாவின் நகரங்களில் உள்ள பாரிய சந்திகளில் செயல்படும் வீதி ஒழுங்கு சைகை ஒளிகளில் (Traffic signal light) சட்ட ஒழுங்கு விதிகளை மீறுவோர், மற்றும் வரையறுக்கப்பட்ட வேகத்தினை விட அதி வேகமாக வாகனம் செலுத்துபவர்கள், என ஒவ்வொருவரையும் ஆதாரங்களுடன் பிடித்து தண்டனை வழங்குவதற்கு தானியங்கி கமராக்கள் (Red light cameras & Speed cameras) செயல்பட்டுக்கொண்டிருப்பது யாவரும் அறிந்ததொரு விடயமாகும். அங்கு தவறு நடந்தால் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு, தண்டனை பணம் செலுத்துமாறு தண்டனை ரிக்கற் தபாலில் தேடி வரும் என்பதும் பலரும் எதிர்கொண்டுவரும் வழமையான நிகழ்வுகளாகும்.
பொதுவாக கனடாவின் அடிப்படை மனித உரிமை சட்டங்களின் பிரகாரம் (Fundamental Charter Rights), வீதி சட்ட ஒழுங்கு மீறல்கள் உட்பட எந்தவொரு குற்றசாட்டுகளிலும் குற்றம் சாட்டபட்டவர்கள் நீதி துறையின் முன்பு தாங்கள் நிரபராதி என்பதனை நிரூபிக்கும் உரிமை உண்டு. அவை இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்து வந்தது..
சிவப்பு நிற சைகை ஒளி கமராக்கள்,மற்றும் வேகமாக வாகனம் செலுத்தி பிடிக்கும் கமராக்களில் அகப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு மனு செய்து நிரபராதி என்பதனை நிரூபிப்பது சிரமமாக இருப்பதால்,"விசாரணையில்லாது பேசி தீர்க்கும் துரித சமாதானம்" (Early solution or First attendance meeting) என்னும் அடிப்படையில் நீதிமன்றத்தின் வழக்கு தொடுனரினை (Prosecutor ) அல்லது சமாதான நீதவானை (JP) நேரடியாக சந்தித்து ஏனைய வீதி ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில்லாது பேசி தீர்ப்பதுபோல் தண்டனை பணத்தினை ரத்து செய்ய அல்லது குறைத்து கொள்ள சந்தர்ப்பங்களை பெற்று அதனை சகலரும் இதுவரை காலமும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் எதிர்வரும் நவம்பர்/2024ம் ஆண்டிலிருந்து இத்தகைய தானியங்கி கமராக்களில் சிக்குப்படும் தண்டனைக்குரிய வாகனங்களின் உரிமையாளர்கள் எவரும் தங்களின் தண்டனை பணங்களினை செலுத்தியேயாகவேண்டும் என்ற சட்டமூலம் மாகாண அரசினால் உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு அவர்கள் மனு செய்யமுடியாது. நிரபராதி எனவும் வாதிடமுடியாது.
தொடர்ந்து விவரமாக தெரிந்துக் கொள்ள வீடியோவைப் பாருங்கள்.......