நீதி தேவதையின் கண்ணை திறந்த சொத்து மோசடி கதை (உண்மை சம்பவம்)
சொத்து உரிமை மோசடிகளில் கனடாவில் நடந்த ஓர் கதை ஒன்றினை மூன்று நிமிடங்களில் சொல்லப்போகின்றேன். ஓர் அனுபவ பாடத்துக்காக கேளுங்கள்.
விசுவாசமாக கண்ணை மூடிக்கொண்டு நம்பியவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் தொடர்ந்து வெற்றிபெறப்போவதுமில்லை.
அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு நம்பியவர்களினை திருவருளின் சக்தி என்றும் கைவிடப்போவதுமில்லை.
என்பதற்கு ஆங்கில ஊடகங்கள் மூலம் பகிரங்கபடுத்தப்பட்ட இவ் சம்பவம் ஓர் உதாரணமாகும்.
திருமதி ஸ்டெல்லா வாசிக் (Mrs.Stella Wasiuk) என்ற 83 வயதான, போலந்து நாட்டினை பூர்வீகமாக கொண்ட அந்த மூதாட்டிக்கு அவரின் கணவர் 1987ம் ஆண்டு மரணமாகிய பின்பு தனித்தவராக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டிருந்தார். பிள்ளைகள் சந்ததிகள் என எவருமில்லை. பாசமாக பழக உண்மையான உறவுகள் என எவரும் அந்த மூதாட்டிக்கு இல்லை.
2008ஆம் ஆண்டு மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில் மருத்துவ உதவியாளராக (Personal support worker) பணிபுரியும் செல்வி. போலின் ரீய்டு (Ms. Pauline Reid) என்ற இளம் வயது கறுப்பின பெண்ணின் நட்பு கிடைத்தது. மூதாட்டிக்கு பணி செய்யும் மருத்துவ உதவியாளர் என ஆரம்பித்து, அவர்களின் நம்பிக்கையான பாச உணர்வு தாய் பிள்ளை போல் வளர்ந்து கொண்டே சென்றது. தம்முடைய வீட்டில் வந்து இருந்தால் பராமரிக்க உதவியாக இருக்கும் என அழைத்து அவர்கள் இருவரும் ஓர் வாடகை குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர்.
அந்த மூதாட்டிக்கு மார்க்கம் நகரில் ஓர் ஆடம்பர தொடர் மாடி குடியிருப்பு (Luxury condo property) சொந்தமாக இருந்தது. சேமிப்பில் பணமும் இருந்தது. தொடர்ந்து தம்மை திருப்தியாக பராமரித்தால் தம் மரணத்தின் பின்பு எவரோ ஒருவருக்கு போய் சேரவேண்டிய அந்த சொத்துக்கள், பணங்கள் யாவற்றினையும் தம்மை பராமரிக்கும் அந்த கறுப்பின மருத்துவ பணியாளருக்கு வழங்குவேன் என்ற வாய்மொழி உறுதி மொழியினையும் வழங்கியிருந்தார்.
முழுமையாக நம்பி பின் தொடர்ந்த அந்த மூதாட்டியின் பாசமான உறவின் செயல்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
இவர்களின் உறவோடு வர்த்தக நோக்கில் உறவாட பிரம்ரன் நகரில் தொழில் புரியும் ரியல் எஸ்டேட் முகவர் திரு. சன்னி காந்தி (Mr. Sunny Gandhi) என்பவரும் சேர்ந்திருந்தார்.
அந்த மூதாட்டியின் மார்க்கம் நகரில் இருந்த அவரது மனை $410,000க்கு விற்கப்பட்டு ஏஜக்ஸ் நகரில் வீடு ஓன்று வாங்கிக்கொடுக்கப்பட்டது.அந்த மூதாட்டியும் தனது பெயரில் வீடு இருப்பதாகவும், வாய்மொழி ஒப்பந்தப்படி தனது பராமரிப்பு என்பது திருப்தியாக இருந்தால் தனது மரணத்தின் பின்பு வீடு என்ற சொத்து அவர்களுக்கு போகும் என்ற நினைப்பில் அந்த கறுப்பின மருத்துவ உதவியாளரையும் சேர்த்து ஒன்றாக அதே வீட்டில் வாழ தொடங்கினார்.
ஆனால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?
தொடர்ந்து விவரமாக தெரிந்துக் கொள்ள இந்தவீடியோவைப் பாருங்கள்.