கனடாவில் வசிப்பவர்களுக்கு தங்களை தேடி வரும் சிறு தொகை - விண்ணப்பிக்க கடைசி திகதி ஏப்ரல்/04/2024
கனடாவில் வசிக்கும் பெரும்பான்மையோர் அநேகமாக " லைவ் லாப்ஸ்" (LIFELABS ) எனப்படும் மருத்துவ நுண்பரிசோதனைக்கூடத்தில் தங்களின் குருதி பரிசோதனைகள் (Blood test), சிறுநீரக பரிசோதனைகள் (Urine test) உட்பட பல விதமான மருத்துவ பரிசோதனைகளினை ஏற்கனவே பல தடவைகள் செய்திருப்பீர்கள்.
இங்கு டிசம்பர்/17/2019ம் ஆண்டுக்கு முன்பு இவ் மருத்துவ நுண்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் $50 - $150 டொலர் வரை ஓர் சிறு தொகை நட்டஈடு வழங்கவேண்டும் என கனடாவின் நீதி துறை வழங்கிய உத்தரவினை தொடர்ந்து அதற்குரிய மனுக்களினை எதிர்வரும் ஏப்ரல்/04/2024 க்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
"இணையவெளி தாக்குதல் மோசடி" (Cyber attack) மூலம் மின் கணனி மையத்தில் இரகசியமாக வைத்திருக்கவேண்டிய பல வாடிக்கையாளர்களின் சில தகவல்கள் வெளியே கசிவதற்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக $9.8 மில்லியன் டொலர் நட்ட ஈட்டு தொகையினை கனடா முழுவதும் உள்ள இந்த மருத்துவ நுண்பரிசோதனை கூடங்களில் ஏற்கனவே பரிசோதனைகள் செய்த சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்து வழங்கவேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டு தற்போது அதன் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
"Lifelabs Compensation" என பதிவு செய்து கூகிள் (Google) இணையதளத்தினூடாக இவை பற்றிய முழு விபரங்களினையும் அறிந்து கொள்ளலாம்.
Detailed information and updates are available on the Settlement
Website linke : https://lifelabssettlement.kpmg.ca
LIFELABSSETTLEMENT. KPMG.CA
என்னும் இணையதளம் மூலம் மிக இலகுவாக தங்களின் விண்ணப்பத்தினை ஓர் ஐந்து நிமிடங்களில் சமர்ப்பித்து விடலாம்.
தங்களின் பெயர் விபரங்கள்,விலாசம், தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி, என இவற்றுடன் மட்டும் மாகாண மருத்துவ இலக்கத்தினையும் (Provincial Health card number) பதிவு செய்து அனுப்பி வைக்கவேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்.