·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

2022 க்கான மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

வடமாகாண கிராம அபிவிருத்தி  திணைக்கள நிதி அனுசரணையில்  மாந்தை கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் இணைந்து  நடாத்தும்  மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் (2022 க்கானது)   இன்றையதினம் பாண்டியன்குளம் பொது நோக்கு  மண்டபத்தில்  இடம்பெற்றது
மாந்தை கிழக்கின் உதவி பிரதேச செயலாளர் திரு .ப. ஜெபமயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களை வரவேற்றல் ,கண்காட்சியை ஆரம்பித்து வைத்தல் ,விழா சுடரேற்றல், இறைவணக்கம், கண்காட்சியை பார்வையிடல் ,கலை நிகழ்வுகள் , விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்றிருந்தன
பிரதம விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி .ந.நிரஞ்சனா , துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா ,கௌரவ விருந்தினர் திரு.சி.உமாபாலன் (மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - முல்லைத்தீவு) அருட்பிரகாசம் அன்டனி க்ரூஸ் (மாந்தை கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ), மற்றும் செல்வன் க.சுஜாந்த் (கிராம அலுவலர்- பாண்டியன்குளம்) மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
நிகழ்வில் மனை பொருளியல் டிப்ளோமா கற்கைநெறியினை பூர்த்தி செய்த    மாணவர்கள்  விருந்தினர்களால்   சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  • 460
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.