Ads
யாழ். மீசாலையில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மீசாலை – புத்தூர் சந்திக்கு அருகில் நடாத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (25) முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
மீசாலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீதியால் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர்கள் இந்த கொலையை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads