தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய டானியல் S. தியாகராஜா 3 மாத சுகயீன விடுமுறையில் உள்ளார்.இந்த நிலையில் பேராயத்தில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு யாப்பின் பிரகாரம் தலைமை பேராயரின் பிரதிநிதியாக ( commissary)ஒருவர் நியமிக்கப்படுவார்.இந்த நிலையில் தலைமை பேராயரின் பிரதிநிதியாக ( commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார் என தென்னிந்திய திருச்சபையின் தலைமை பேராயம் அறிவித்துள்ளது.பேராயர் சிகிச்சை முடித்து கடமைகளை பொறுப்பேற்கும் வரை யாழ் ஆதீனத்தின் கடமைகளை இவர் வகிப்பார்.பேராயர் டானியல் S தியாகராஜாவின் பதவிக் காலம் 2022 நவம்பர் 09 திகதி வரை உள்ளதுடன், மேலும் 3 ஆண்டுகள் பதவி காலம் நீடிப்பதற்கான சூழலும் உள்ளது. புதிய யாப்பு திருத்தங்களின் அடிப்படையில் பேராயர் 70 வயது வரை இருக்கலாம் என தீர்மானம் எட்டப்படும் நிலையில் தொடர்ந்தும் 3 ஆண்டுகள் இவர் பதவி வகிப்பார்.இந்த நிலையில் தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற சிலரால் பேராயரின் சுகவீனம் தொடர்பிலும், பதவிக்காலம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.பேராயர் சுகமடைந்துள்ளதாகவும், வைத்தியர் ஆலோசனையின் பிரகாரம் சில நாட்கள் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வகையில் சுகவீன விடுமுறை பெற்றுள்ளதாகவும் பேராயரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.