Category:
Created:
Updated:
தலவாகலையில் உள்ள லிந்துல சுகாதார பரிசோதகர் பிரிவில் நேற்றையதினம் (21) 15 கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்திற்கு கடந்த 11ம் திகதி கொழும்பிலிருந்து வருகை தந்த சமய தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தரும் பொழுது கினிகத்தேனை களுகல பகுதியில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவர் டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்தில் அவரின் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டது மட்டுமன்றி அப்பகுதியில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்றுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.