
சமாதான ஒப்பந்தங்கள் யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது - இம்மானுவேல் மெக்ரோன்
போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, யுக்ரேனில் சமாதான ஒப்பந்தங்கள் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அது யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது என இம்மானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இருநாட்டு ஜனாதிபதிகளும் தங்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதேநேரம், யுக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான செலவு மற்றும் சுமையை அமெரிக்கா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளும் ஏற்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாதுகாப்புச் சுமையை இன்னும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா புரிந்துகொண்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் பதிலளித்தார்.
000