Ads
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பம் - இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தலைமையிலான குழுவொன்று பூமியிலிருந்து 489 ஒளியாண்டுகள் தொலைவில் இன்னொரு சூரியக் குடும்பம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இப் புதிய சூரியக் குடும்பம் GG Tau A எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த சூரியக் குடும்பத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றி வருவதாகவும் இதுவொரு அரிய அமைப்பு எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நட்சத்திரங்களைச் சுற்றி வாயு, தூசியால் உருவான வளையம் ஆகியவை காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Info
Ads
Latest News
Ads