சினிமா செய்திகள்
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
Ads
 ·   ·  1808 news
  •  ·  0 friends
  • 1 followers

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - வடமராட்சியில் டக்ளஸ்

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (02.11.2024) சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் -

நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் முன்னோர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றை அலங்கரித்தினர்.

ஆனால் அவர்கள் தாம் முன்வைத்த விடயத்த்தின் இலக்கை அடையச் செய்வதற்கான  பொறிமுறையை துளியளவும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்றுதான் அவர்கள் வழி வந்து போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் பொறிமுறையற்றதாக இருக்கின்றது.

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே எனக்க தாருங்கள் என கோருகின்றேன்

அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது.  நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது.

இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை.

எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

 

  • 556
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads