Category:
Created:
Updated:
எதிர்வரும் ஆண்டு ரொறன்ரோ நகரம் புதிய பகுதி குறியீட்டைப் பெரும் என கனடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொடர்பாடல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த புதிய குறியீட்டு எண் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள 416, 647 மற்றும் 437 ஆகிய இலக்கங்களுடன் 942 என்ற இலக்கமும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இது நடைமுறைபடுத்தப்பட உள்ளது.