Ads
காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினம் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட போதிலும் காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினமாக இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அந்த நாட்டுத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸின் துணைத் தலைவர் கலீல் அல்-ஹய்யா, இஸ்ரேல் ஆயுதங்களுடன் காசாவில் இருந்து வெளியேறினால் மாத்திரமே இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் காசா - இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சுவார்த்தை கடினமாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஹெஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போரை நிறுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Info
Ads
Latest News
Ads