தோல்வியை தவிர்க்க களமாடும் இந்திய அணி
சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில், தோல்வியை தவிர்த்து, வெற்றி தோல்வியற்ற முடிவைக் கொண்டு வருவதும், அல்லது அசாதாரணமான முறையில் இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதும் இந்திய அணியின் கைகளிலேயே தங்கியுள்ளது.
பெங்களூரில் நடைபெறுகின்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றநிலையில் நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சிறப்பான 402 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடும் நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் நிறைவின்போது, 3 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் முக்கியமாக ரோஹித்த சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஆகியோரின் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
ஆடுகளத்தில் சர்பராஸ்கான் 116 ஓட்டங்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இந்திய அணி நியூஸிலாந்து அணியைக் காட்டிலும் 33 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.
இந்த 33 ஓட்டங்களையும் அடைந்து, அதன் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்புடன் இன்றைய ஆட்டத்தில் இந்தியா துடுப்பாடுகின்றது.
எனவே இந்திய அணிக்கு சவால்மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.