- · 5 friends
-
I

கனடாவில் பணி அனுமதி பெற விண்ணப்பம் செய்பவருக்கு விசேட அறிவிப்பு
கனடாவில் வொர்க் பெர்மிட் அல்லது பணி அனுமதி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்பவருக்கு கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கனடாவிற்கு விசிட் வீசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்கள் கனடாவில் இருந்து கொண்டு வொர்க் பெர்மிட் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்ய முடியாது என அறிவித்துள்ளது. விசிட் வீசாவில் தற்காலிகமாக கனடாவிற்குள் வருகை தந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமலேயே பணி அனுமதி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.