சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடாது எதிர்கொள்வதே முக்கியம் - அமைச்சர் அலி சப்ரி
சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடுவது முக்கியம் அல்ல, அதை எதிர்கொள்வதுதான் முக்கியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்’ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்திற்கு இயலும் ஸ்ரீலங்கா என்ற பெயரை தெரிவு செய்தமைக்கு விசேட காரணம் ஒன்று உள்ளது.
2022 இல், நம்மால் முடியாது என்று பலர் இந்த நாட்டைப் பொறுப்பேற்க விரும்பவில்லை. எவராலும் முடியாது என்று கூறிய அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது குழுவினரும் செய்து முடித்துள்ளனர்.
அதனால்தான் நமக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று கூறுகிறோம். இந்தக் காரணங்களுக்காகவே இந்த ஐந்தாண்டு நடவடிக்கைக்கு “இயலும் ஸ்ரீலங்கா” என்று பெயரிட்டுள்ளோம். இந்த விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண்களை வலுவூட்டும் வகையில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு 3 மில்லியன் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000