Category:
Created:
Updated:
முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் கோடிக் கணக்கில் செலவழித்து மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
குறித்த திருமணமானது பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகள் Casa Las Olas இல் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை 30,000 அமெரிக்க டொலராகும். அதாவது ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாகும்.
திருமணத்திற்கான சரியான செலவு தெரியவில்லை என்றாலும், முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு 5000 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.