Ads
இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்
இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு, அவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாம்பன் மீனவர்கள் இன்று காலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீனவர்கள் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads