அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் - யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் வலியுறுத்து
அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கிராமிய கடல் கடல் தொழில் அமைப்புகளின் சமூகத்தின் ஊடக சந்திப்பு யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருது வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினர் இன்றும் கூட 3 இழுவைப்படகுகளில் 21 மீனவர்களினை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் நூற்றுக்கணக்கான படகுகளில் எல்லை தாண்டி உள்ளே வந்து தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சில படகுகளை பிடித்தால் போதாது. அவர்களில் அதிகமான படகுகளை பிடிக்கவேண்டும். கடல் படை மேலும் துரிதமான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என நாங்கள் வினயமாக கேட்டு கொள்கிறோம்.
இந்த செயல்பாட்டில் ஈடு படும் போது எங்களாலான உதவியினையும் செய்வோம் என கூறிக்கொள்கிறோம்.
அடுத்ததாக இந்த செயல்பாட்டை எமது கடல் தொழில் அமைச்சும், கடல் தொழில் திணைக்களமும் போன்றன மேலும் மேலும் அவர்களை தூண்டி செயற்படுத்த வேண்டும்.
அத்துடன் எமது தொப்புள் கொடி உறவு வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளித்துக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. இங்கே இந்திய இழுவை படகுகள் ஒருநாள் வந்து இங்கே எமது பிரதேசத்தில் அதிகமான படகுகள் குறைந்துள்ளது.
வடமராட்சி கிழக்கிலிருந்து நெடுந்தீவு வரைக்குமான பிரதேசத்திலே தொழில் செய்கின்ற படகுகளில் கிட்டத்தட்ட ஒருநாளில் 100 படகுகள் சேதப்படுகிறது. சாதாரணமாக ஒரு வலையின் பெறுமதி 50000 ரூபாய். ஒரு படகில் 30 வலை கொண்டு செல்கிறார்கள். இதற்கு 15 இலட்சம் ரூபாய் முடிகிறது. ஒவ்வொருநாளும் அந்த விலை அளிக்கப்படுகிறது.
நீங்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக்கொண்டு வயிற்றிலே அடிக்க வேண்டாம் என்று தயவாக உங்களை கேட்டு கொள்கின்றோம்.என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000