கட்டின மனைவிய என்னன்னு நினைச்சீங்க??????
கணவன்: நான் கொஞ்சம் bank வரைக்கும் போயிட்டு வந்துடறேன்
(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? Bank வேலை முடிஞ்சுதா?
கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!
(15 நிமிடம் கழித்து)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?
கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.
மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!
(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)
மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?
கணவன்: எல்லா வேலையும் முடிஞ்சுது. ஆவின் பாலகத்துல ஒரு டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்!
மனைவி: அதானே பாத்தேன்! கரண்டு கம்பத்த பாத்த ஏதோ மாதிரி உங்க வண்டி கடையப் பாத்ததுமே தன்னால நின்னுடுமே!
கணவன்: (சற்றே எரிச்சலுடன்) சரி, இப்ப என்ன பண்ணனுங்கிற?
மனைவி: அங்க உளுந்துவடையும், கெழங்கு போண்டாவும் நல்லா இருக்கும், ஆளுக்கு ரெண்ரெண்டு வாங்கிட்டு வாங்க!
(கணவன் வீடு வந்து சேர்ந்தது மனைவிக்கு தெரியவில்லை. அந்தளவுக்கு சமையலறையில் பிசி!)
மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?
கடுப்பான கணவன்: பெட் ரூம்ல ட்ரெஸ் மாத்திக்கிட்டிருக்கேண்டீ! இப்ப என்ன?
மனைவி: (அதே கடுப்பான தொனியில்) வந்ததும் வராததுமா அங்க உக்காந்துகிட்டு ஃபேஸ்புக்கு நோண்டாதீங்க! வந்து தேங்காய ஒடச்சு, துருவி குடுங்க! சாம்பாருக்கு வேணும்!
கணவன் தேங்காயை எடுத்தவாறே மனசுக்குள்: பேசாம சிவன் குடுத்தாப்ல ஒடம்புல பாதிய குடுத்திருக்கலாம்! எங்க போனாலும் கூடவே வந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிடுவா! வெளில எங்க போனாலும் மனுசன் இங்கதான் இருப்பான்னு எப்படி கண்டுபிடிக்கிறான்னே தெரியல! ஒருவேளை எனக்கே தெரியாம என்னோட ஒடம்புல GPRS Chip வெச்சிருப்பாளோ!
Moral-1 : The God says, wherever you go, I’m there!
Moral-2: கட்டின மனைவி கடவுளுக்கு சமம்!