• 163
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

பயங்கரமான ஆளுய்யா நீ....

ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. 
அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.
பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.
பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி  விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.
அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்குமாம்மா"ன்னு கேட்க இவ செம குஷியா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்"ன்னு பெருமபட்டுக்கிட்டா.
அந்தம்மாவுக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ஒதுக்குப்புறமா ஒரு பஸ் ஸ்டாப். அதுல எப்பவுமே ஜனங்க யாரும் இருக்கமாட்டாங்க. 
யாராவது ஒருத்தரு ரெண்டுபேர் இருந்தாலே அபூர்வம்.
அந்த பஸ் ஸ்டான்ட்ல இந்தம்மா பஸ்ஸுக்காக நிக்க, பக்கத்துலே ஒரு எழுபத்தஞ்சு வயசு பெரியவரும் நின்னுட்டிருந்தாரு.
இந்தம்மா அவராண்ட போயி "சார், நீங்க தப்பா நெனச்சிக்கில்லேன்னா, எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னுசொல்ல முடியுமா"ன்னு கேட்க, அவரு சொன்னாரு "நான் உன்னோட கரெக்ட் வயச சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன். 
ஒண்ணு நான் உன் கன்னத்த நல்லா தடவிக்கொடுப்பேன்.
ரெண்டாவது உன்ன ஒரு அரை நிமிஷம் கட்டிப்பிடிச்சிக்குவேன். ஓகேயா?" கேட்க......
இந்தம்மாவும் சுத்தும்முத்தும் பாத்துச்சி. பஸ் ஸ்டாப்லேயும் யாரும் இல்லே.
ஓகே சொல்லிடிச்சு.
பெருசும் இவ கன்னத்த நல்லா தடவி கொடுத்துச்சு. பொறவு நல்லா இறுக்கி கட்டிபிடிச்சுட்டு அவ காதாண்டே ......
"உனக்கு நாப்பத்தேழு வயசு"ன்னு சொல்ல இவளுக்கு செம ஷாக்கு.
"எப்படி பெரியவரே கட்டிப் பிடிச்சவுடனே கரெக்டா என் வயச கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க..............
பெருசு சொல்லிச்சு...
"நீ அடையார் ஆனந்தபவன்ல அந்த சேல்ஸ் புள்ளையாண்ட பேசச் சொல்லோ, நான் பின்னாடி நின்னுட்டிருந்தேன்"!!

(சிரிப்பதற்கு மட்டுமே...)

Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14