• 201
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

என்ன ஒரு வில்லத்தனம்...?

பேப்பரில் ஒரு விளம்பரம்..
''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..
"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......
"அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.. நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...!!!

எப்புடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14