Category:
Created:
Updated:
I
ஒரு பெண்மணி செருப்பு கடைக்கு சென்று செருப்புகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.
ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட கடையில் உள்ள 40 50 ஜோடிகளை முயற்சித்துப் போட்டு, ஒரு வழியாக ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டு கடைக்காரரிடம் மகிழ்ச்சியாக எனக்கு ஏற்ற அளவுள்ள செருப்பு கிடைத்துவிட்டது என்று கூறினார்.
"இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?" என்றார் பெண்மணி
"அந்த செருப்பிற்கு நீங்கள் பணம் தரத் தேவையில்லை" என்றார் கடைக்காரர்
"நான் பணம் கொடுத்தே தீருவேன்" என்றார் பெண்மணி
"நீங்கள் தேர்ந்தெடுத்த செருப்பு நீங்கள் கடைக்கு வந்தபோது போட்டுக் கொண்டு வந்த செருப்பு" என்றார் கடைக்காரர்.