·   · 50 jokes
 •  · 5 friends
 • I

  9 followers

நானும் வரலாமா?


இரவு நேரத்தில்,  வீட்டுக்கு வெளியே  நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர்.            தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது.        சில நிமிடங்கள்  கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது.       மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார்.  
உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது.  
வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.  
பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.         இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.  
இருப்பினும் நாய், இங்கே எதற்காக வந்தது?  ரொம்பவும் குழம்பி போனார்.        இரவு உறங்கி விட்டு, காலையில் எழுந்து, குளித்து , உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.         வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.  மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னான் வேலைக்காரன்.         மறுநாள் இரவு. மறுபடியும் அதே நேரம். அதே நாய்.  அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு, அதே இடத்தில் தூங்கி விட்டது.  மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.        இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய்  எங்கிருந்து வருகிறது? என்று அவரால்  கண்டுபிடிக்க முடியவில்லை.        ஒருநாள் ஒரு துண்டுச்சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார்.  
மறுநாள் அந்த நாய் வரும்போது, கழுத்தில்  வேறு ஒரு துண்டுச்சீட்டு இருந்தது.          படித்து விட்டு, உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.       அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..           "அன்பு மிக்கவருக்கு வணக்கம்! .  
இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக இரவு வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது.  
தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".      பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன....


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 64
 • More
Comments (0)
  Latest Jokes (Gallery View)
  1-14
  Info
  Created:
  Updated:
  சிறப்பு நகைச்சுவைகள்
  My new wife
  என் புது பொண்டாடி செய்தது
  Happy Mothers day
  Mothers day
  குதிரை பந்தயம்
  குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
  ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்