·   · 34 jokes
  •  · 5 friends
  • I

    9 followers

நீதிமன்றத்தில் நடந்த நகைச்சுவை

ஒரு சின்ன ஊரில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது.


அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க.


வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க 

.

பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?


அதிர்ந்து போனார் வக்கீல் ...


மெல்ல சமாளிச்சிகிட்டு...


"சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.


பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்


ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு...


வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .


ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்..!!

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 69
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்